விஜய் சேதுபதியின் ‘காந்தி டாக்ஸ்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் சேதுபதியின் ‘காந்தி டாக்ஸ்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு


சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய்சேதுபதி. இவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் கொண்டவர். இவருக்கு தமிழ் மொழியை தாண்டி மலையாளம், தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

இவர் தற்போது, இந்தியில் ‘காந்தி டாக்ஸ்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதியுடன் அரவிந்த்சாமி, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் பேசும் படம் போன்று இந்த படத்தை மவுன படமாக எடுத்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார். அதன்படி, இப்படத்தின் டீசரை வெளியிட்டு, படம் வருகிற 30ந் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *