கூலி படத்தில் நடித்ததால் வந்த டரோல்.. நடிகர் உபேந்திரா கொடுத்த பதில்

கூலி படத்தில் நடித்ததால் வந்த டரோல்.. நடிகர் உபேந்திரா கொடுத்த பதில்


சூப்பர்ஸ்டார் ரஜினியின் கூலி படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து இருந்தார். அவரது கதாப்பாத்திரம் அதிகம் ட்ரோல்களையும் சந்தித்தது.

ரஜினி சொன்னதை செய்யும் அடியாள் போல அவரது ரோல் இருந்தது, அதனால் அவர் ஏன் இதில் நடிக்க ஒப்புக்கொண்டார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.

கூலி படத்தில் நடித்ததால் வந்த டரோல்.. நடிகர் உபேந்திரா கொடுத்த பதில் | Upendra Reply Trolls On Coolie

பதில்

இந்நிலையில் உபேந்திரா ட்ரோல்களுக்கு பதில் அளித்து இருக்கிறார். தான் ரஜினிக்காக மட்டுமே கூலி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறியுள்ளார்.

“ரஜினி சாருக்காக தான் கூலியில் நடித்தேன். அவரோடு நடிப்பதெல்லாம் நான் கனவில் கூட நினைக்காதது. நான் அவரது பெரிய ரசிகன்.”

“ஆரம்பத்தில் எனது ரோலுக்கு ஒரே ஒரு சண்டைக்காட்சி மட்டுமே இருந்தது. ஆனால் நடிக்க தொடங்கிய பிறகு தான் காட்சிகள் கொஞ்சம் அதிகரிக்கப்பட்டது.”

“அவருக்கு அருகில் நிற்கும் ஒரு சின்ன ஷாட் மட்டுமே கூட இருந்தாலும் நான் மகிழ்ச்சியாக நடித்திருப்பேன்” என அவர் கூறியுள்ளார்.
  

கூலி படத்தில் நடித்ததால் வந்த டரோல்.. நடிகர் உபேந்திரா கொடுத்த பதில் | Upendra Reply Trolls On Coolie


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *