2025ம் ஆண்டின் சிறந்த கொரியன் வெப் தொடர்…3-வது இடத்தில் ’ஸ்குவிட் கேம்’ சீசன் 3|The best Korean web series of 2025… ‘Squid Game’ Season 3 is in 3rd place

2025ம் ஆண்டின் சிறந்த கொரியன் வெப் தொடர்…3-வது இடத்தில் ’ஸ்குவிட் கேம்’ சீசன் 3|The best Korean web series of 2025… ‘Squid Game’ Season 3 is in 3rd place


சென்னை,

2025ம் ஆண்டிற்கான சிறந்த கொரியன் வெப் தொடர் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியல், கொரியன் தொடர்களுக்கு உள்ள ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

அந்த பட்டியலில், ’வென் லைப் கிவ்ஸ் யு டேன்ஜரின்’(When Life Gives You Tangerines) தொடர் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த தொடர், அதன் உணர்ச்சிபூர்வமான கதை, நுணுக்கமான திரைக்கதை மற்றும் வலுவான நடிப்புகளால் உலகளாவிய ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தது.

2வது இடத்தை ’வே பேக் லவ்’(Way Back Love) தொடர் பிடித்துள்ளது. இந்த தொடர், இளம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும், உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ’ஸ்குவிட் கேம்’(Squid Game) தொடரின் மூன்றாவது சீசன். இது 2025 சிறந்த கொரியன் தொடர்கள் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.



admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *