சண்முகபாண்டியனின் “கொம்புசீவி” படத்தின் 3வது பாடல் வெளியானது

சண்முகபாண்டியனின் “கொம்புசீவி” படத்தின் 3வது பாடல் வெளியானது


சென்னை,

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் “மதுர வீரன், படை தலைவன்” உள்ளிட்ட படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார். தற்போ நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ‘கொம்புசீவி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பொன்ராம் இயக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நகைச்சுவை கலந்த இக்கதையில், ரவுடியாக சண்முக பாண்டியன் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமாரும் நாயகியாக தார்னிகா என்பவரும் நடித்துள்ளனர். தார்னிகா நாட்டாமை படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் 1996 -ல் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது, இந்த நிலையில், இப்படத்தின் 3வது பாடலான “கருப்பன்” என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை மகாலிங்கம் பாடியுள்ளார். இதற்கான பாடல் வரிகளை பால சிவசாமி எழுதியுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *