ஹனிரோஸின் “ரேச்சல்” ரிலீஸ் ஒத்திவைப்பு

ஹனிரோஸின் “ரேச்சல்” ரிலீஸ் ஒத்திவைப்பு


தமிழ், தெலுங்கு, மலையாள திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஹனி ரோஸ். தற்போது மலையாளத்தில் உருவாகி உள்ள ‘ரேச்சல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். கறி வெட்டும் தொழிலாளியாக படத்தில் நடித்துள்ள ஹனிரோஸ் தோற்றம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

ஆனந்​தினி பாலா இயக்​குந​ராக அறி​முக​மாகும் ​இப்படத்​தில், ராதிகா ராதாகிருஷ்ணன், பாபு​ராஜ், சந்து சலீம்​கு​மார், ஜாபர் இடுக்​கி, வினீத் தட்​டில், ரோஷன் பஷீர் ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். இப்படம் டிசம்பரில் திரைக்கு வெளி​யா​வ​தாக இருந்​த நிலையில் படத்தின் புரொமோஷன் பணிகள் நடைபெற்றுவந்தன.

இந்நிலையில் ‘ரேச்சல்’ என்ற படத்தின் ரிலீஸை படக்​குழு ஒத்திவைத்​துள்​ளது. இதுபற்றி படக்​குழு வெளி​யிட்​டுள்ள செய்​தி​யில், “சரி​யான நேரம் மற்​றும் ஒட்​டுமொத்த ரிலீஸ் சூழலைக் கருத்​தில் கொண்​டு, பார்​வை​யாளர்​களுக்​குச் சிறந்த அனுபவத்தை வழங்​கு​வதை உறு​தி​செய்​வதற்​காக ரிலீஸ் தேதியை மாற்றி வைத்​துள்​ளோம்” என்று தெரி​வித்​துள்​ளது.

View this post on Instagram

A post shared by Honey Rose (@honeyroseinsta)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *