ஒரே நாளில் இரண்டு கார் வாங்கிய எம்.எஸ்.பாஸ்கர்! வீடு கூட இல்லாமல் வறுமையில் இருந்தது பற்றி எமோஷ்னல்

ஒரே நாளில் இரண்டு கார் வாங்கிய எம்.எஸ்.பாஸ்கர்! வீடு கூட இல்லாமல் வறுமையில் இருந்தது பற்றி எமோஷ்னல்


டிராமா ட்ரூப்பில் நடிகராக இருந்து, அதன் பின் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றி, அதற்கு பிறகு
சின்னத்திரையில் காமெடி நடிகராக பிரபலம் ஆனவர் எம்எஸ் பாஸ்கர். அவர் நடித்த பட்டாபி கதாபாத்திரம் தற்போதும் பெரிய அளவில் பேசப்படும் ஒன்று தான்.

எம் எஸ் பாஸ்கர் தற்போது படங்களில் குணசித்திர வேடங்களில் அதிகம் நடித்து வருகிறார். பார்க்கிங் படத்திற்காக அவருக்கு சிறந்த் துணை நடிகருக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் இரண்டு கார் வாங்கிய எம்.எஸ்.பாஸ்கர்! வீடு கூட இல்லாமல் வறுமையில் இருந்தது பற்றி எமோஷ்னல் | Actor Ms Bhaskar Buys Two Cars On Same Day

இரண்டு கார்

இந்நிலையில் எம்.எஸ் பாஸ்கர் ஒரே நாளில் இரண்டு கார்களை வாங்கி இருக்கிறார். அந்த போட்டோவை பகிர்ந்த்து இருக்கும் அவரது மகள் ஐஸ்வர்யா, ஒருகாலத்தில் வாழ வீடு கூட இல்லாமல் வறுமையில் வாடியது பற்றி எமோஷ்னலாக பதிவிட்டு இருக்கிறார்.

சொந்த வீடு இல்லாமல், நாளைக்கு எங்கே போய் வாழ்வது என தெரியாத நிலையில் இருந்து தற்போது ஒரே நாளில் இரண்டு கார்களை வாங்கும் அளவுக்கு வந்திருப்பது எளிமையான விஷயம் அல்ல.


கடினமாக உழைத்த அப்பா எம்.எஸ்.பாஸ்கர், மற்றும் பணத்தை சிக்கனமாக செலவு செய்து சேமித்த அம்மா ஆகிய இருவது வெற்றி இது என மகள் ஐஸ்வர்யா பதிவிட்டு இருக்கிறார்.  

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *