சூர்யாவின் 47வது படத்தின் பூஜை வீடியோ வெளியீடு

சூர்யாவின் 47வது படத்தின் பூஜை வீடியோ வெளியீடு


சென்னை,

‘ரெட்ரோ’ படத்தைத் தொடர்ந்து சூர்யா தற்போது ‘கருப்பு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இதையடுத்து சூர்யா நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மலையாளத்தில் ‘ஆவேசம்’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்த ஜித்து மாதவன் இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்கப் போகிறார். இது அவரது 47-வது படம் ஆகும். புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்றுமுன்தினம் சென்னையில் தொடங்கியது.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறார். ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படத்துக்கு பிறகு, அதாவது 11 ஆண்டுகளுக்குப் பிறகு நஸ்ரியா நடிக்கும் தமிழ் படம் இதுவாகும். மேலும் நஸ்லென், ஜான் விஜய் ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் படத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை ழகரம் ஸ்டுடியோ சார்பில் ஜோதிகா தயாரிக்கிறார்.

இந்நிலையில், ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் நடிப்பில் உருவாகவுள்ள ‘சூர்யா 47’ படத்தின் பூஜை வீடியோவை ‘ழகரம்’ படக்குழு வெளியிட்டுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *