“ரொம்ப வாழ்க்கையில் அடிவாங்கி இருக்கேன்”.. திருமணம் குறித்து மனம் திறந்து பேசிய நடிகர் சிம்பு

“ரொம்ப வாழ்க்கையில் அடிவாங்கி இருக்கேன்”.. திருமணம் குறித்து மனம் திறந்து பேசிய நடிகர் சிம்பு


சிம்பு 

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் அரசன். இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்க அனிருத் இசையமைக்கிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. வடசென்னை உலகில் அரசன் படம் உருவாகிறது. இதனால் இப்படத்தின் மீது ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். மேலும் எஸ்.டி.ஆர் 49 திரைப்படமும் சிம்பு கைவசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் 



சமீபத்தில் மலேசியா சென்றிருந்த சிம்பு அங்கு கார் ரேஸில் பங்கேற்ற அஜித்தை சந்தித்த புகைப்படங்கள், வீடியோக்கள் கூட இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், திருமணம் குறித்து நடிகர் சிம்பு வெளிப்படையாக மனம் திறந்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் கூறியதாவது: “திருமணம் நடக்கும்போது நடக்கும். தனியா இருக்கிறதும், யாரோட இருக்கிறதும் மேட்டர் கிடையாது. நீங்க ஒழுங்கா, நிம்மதியா இருக்கீங்களா என்பதுதான் மேட்டர். சந்தோஷமா இருக்கீங்களா? நாலு பேரை நிம்மதியா பார்த்து கொள்கிறீங்களா? அது போதும். நான் இப்போ இப்படி பேச காரணமே ரொம்ப வாழ்க்கையில் அடிவாங்கி இருக்கேன்” என கூறியுள்ளார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *