Suriya’s “Anjaan” re-release well received – Director Lingusamy | சூர்யாவின் “அஞ்சான்” ரீ-ரிலீஸுக்கு நல்ல வரவேற்பு

Suriya’s “Anjaan” re-release well received – Director Lingusamy | சூர்யாவின் “அஞ்சான்” ரீ-ரிலீஸுக்கு நல்ல வரவேற்பு


சென்னை,

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2014- ம் ஆண்டு வெளியான படம் ‘அஞ்சான்’. இத்திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கியிருந்தார். இந்த படத்தினை ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் சமந்தா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் வித்யூத் ஜம்வால், சூரி, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கமர்ஷியல் படமாக வெளிவந்த அஞ்சான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆன நிலையில் படத்தின் ரீ-எடிட் வெர்சன் இன்று ரீ-ரிலீஸானது.

இந்த நிலையில், இயக்குநர் லிங்குசாமி, “அஞ்சான் படம் ரிலீஸ் ஆனப்போ பெரிய அளவில் எல்லாம் டிரோல் பண்ணிட்டாங்க. இப்போ நிறைய பேர் படம் பார்த்துட்டு இந்த படத்தையா டிரோல் பண்ணாங்க? எனக்கு ரொம்ப புடிச்சிருக்குன்னு சொன்னாங்க. சூர்யா ரசிகர்களுக்காகவும், இந்த படத்தை உண்மையாக நேசித்தவர்களுக்காகவும் இப்போ ரீ-ரிலீஸ் பண்ணிருக்கோம்” என்றார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *