அனுபமா நடித்துள்ள ‘லாக் டவுன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அனுபமா நடித்துள்ள ‘லாக் டவுன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


சென்னை,

லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள ‘லாக் டவுன்’ திரைப்படத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் ஏஆர் ஜீவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு என்ஆர் ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர். கே.ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர், பாடல்கள் ஆகியவை சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், லாக் டவுன் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிகாரபூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, லாக் டவுன் படம் வருகிற டிசம்பர் மாதம் 5ந் தேதி வெளியாக உள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *