ஆலியா பட் அணிந்திருக்கும் இந்த ஆடையின் விலை எவ்வளவு தெரியுமா? தெரிந்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள்

ஆலியா பட்
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆலியா பட். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு ஜிக்ரா எனும் படம் வெளிவந்தது.
இப்படத்தை தொடர்ந்து ஆல்பா படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தற்போது லவ் & வார் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
ஆடையின் விலை
நடிகை ஆலியா பட் தனது கணவர் ரன்பீர் கபூர் உடன் இணைந்து துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
அப்போது அவர் அந்த நிகழ்ச்சிக்கு அணிந்து வந்திருந்த ஆடை அனைவரின் கவனத்தை ஈர்க்க, அந்த ஆடையின் விலை மதிப்பு எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, துபாய் நிகழ்ச்சியில் நடிகை ஆலியா பட் அணிந்திருந்த அந்த ஆடையின் விலை $2,400 டாலர் என கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ. 2.12 லட்சம் ஆகும்.






