உதவி செய்து கின்னஸ் சாதனை படைத்த பிரபல பாடகி|Famous singer sets Guinness record by helping

உதவி செய்து கின்னஸ் சாதனை படைத்த பிரபல பாடகி|Famous singer sets Guinness record by helping


மும்பை,

மத்தியப் பிரதேசம், இந்தூரைச் சேர்ந்த பாடகி பாலக் முச்சால், 3,800 இதய அறுவை சிகிச்சைகளுக்கு நிதியுதவி கொடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகி பாலக் முச்சால். பாலிவுட் பாடகியான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார். தமிழில் அனுஷ்கா நடித்த ‘இஞ்சி இடுப்பழகி’ உள்பட சில படங்களில் பாடியுள்ள இவர், தனது சகோதரர் பலாஷுடன் இணைந்து, அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார்.

இதன் மூலம் ஏழைக் குழந்தைகளின் இதய அறுவைச் சிகிச்சைக்காக நிதி திரட்டி வழங்குகிறார். இதுவரை 3,800-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைகளுக்கான நிதி உதவிகளைச் செய்துள்ளார். இதற்காக லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸிலும் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் அவர் இடம்பெற்றுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *