மீண்டும் பாக்கியா குடும்பத்துடன் சேர்ந்தாரா கோபி- வேதனையில் ராதிகா எடுத்த முடிவு

மீண்டும் பாக்கியா குடும்பத்துடன் சேர்ந்தாரா கோபி- வேதனையில் ராதிகா எடுத்த முடிவு


மீண்டும் பாக்கியா குடும்பத்துடன் கோபி இருப்பதை கண்ட ராதிகா இறுதியாக ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.


பாக்கியலட்சுமி


பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்கியா வீட்டில் மீண்டும் கோபி வந்து இருப்பது பாக்கியாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

ஆனால் தன்னுடைய மாமியார் மற்றும் குழந்தைகளுக்காக கோபியை வீட்டில் இருக்க சம்மதம் தெரிவித்து வருகிறார்.

இதனால்
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் அதிகமாகி வருகிறது. இருந்தாலும் ஈஸ்வரிக்கு மகன் மீதுள்ள பாசம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

மீண்டும் பாக்கியா குடும்பத்துடன் சேர்ந்தாரா கோபி- வேதனையில் ராதிகா எடுத்த முடிவு | Baakiyalakshmi Serial Gopi Family Happy For Iniya


அடிக்கடி நெஞ்சுவலியால் அவஸ்தைப்படும் கோபி தன்னுடைய இறுதி நாட்களை குடும்பத்தினருடன் கழிக்க வேண்டும் என நினைக்கிறார். இதனால் வீட்டிலுள்ளவர்கள் ஆதரவாக சில வேலைகளை பார்த்து வருகிறார்.




ஈஸ்வரியின் திட்டம்



இதனை தொடர்ந்து கோபி மீது பாக்கியா கொடுத்த புகாரை திரும்ப வாங்குமாறு ஈஸ்வரி பாக்கியாவிடம் கெஞ்சுகிறார்.

“உன்னிடம் மடிப்பிச்சை கேட்கிறேன்” என்று அழுகிறார். பாக்கியாவால் எதுவுமே பேச முடியவில்லை. அதன் பின்னர் எழிலை வீட்டிற்கு வரவழைத்து மீண்டும் குடும்பத்தினருடன் சேர்வது குறித்து பேசுகிறார்.

இந்த சமயம் பார்த்து கோபியை பார்க்க வீட்டிற்கு ராதிகா வருகிறார்.

மீண்டும் பாக்கியா குடும்பத்துடன் சேர்ந்தாரா கோபி- வேதனையில் ராதிகா எடுத்த முடிவு | Baakiyalakshmi Serial Gopi Family Happy For Iniya

அப்போது மயூவின் பிறந்தநாளை பற்றி பேசுகிறார். ஆனால் கோபி இனியாவின் டான்ஸ் போட்டி பற்றி பேசுகிறார்.

இதனால் கடுப்பான ராதிகா, அங்கிருந்து கிளம்பி விட்டார். அந்த சமயம் பார்த்து இனியா, “தயவு செய்து என் அப்பாவுக்கு விவாகரத்து கொடுங்கள்..” என மோசமாக ராதிகாவிடம் பேசுகிறார்.


ராதிகாவின் இறுதி முடிவு


இந்த நிலையில் மனமுடைந்து வீட்டை காலி செய்து விட்டு தனியாக போகும் முயற்சியில் ராதிகா இறங்குகிறார். ராதிகாவின் வாழ்க்கை இரண்டு முறை வீணாகியதை நினைத்து கமலா மிகுந்த மன வருத்தம் அடைகிறார்.

மீண்டும் பாக்கியா குடும்பத்துடன் சேர்ந்தாரா கோபி- வேதனையில் ராதிகா எடுத்த முடிவு | Baakiyalakshmi Serial Gopi Family Happy For Iniya


பின்னர், ராதிகா இனியாவின் போட்டிகள் ஆரம்பமாகி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

அப்போது மகள் மற்றும் முன்னாள் மனைவி பாக்கியாவுடன் கோபி சந்தோஷமாக இருப்பதை தொலைக்காட்சி வழியாக ராதிகா பார்த்துக் கொண்டிருக்கிறார்.



கோபியை மகிழ்ச்சியாக விட்டுவிட்டு ராதிகா தனியாக மயூவுடன் சென்றுவிடுவாரா? என்பதனை இனி வரும் எபிசோட்களில் தொடர்ந்து பார்க்கலாம். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

     


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *