நேரடியாக ஓடிடிக்கு வரும் ராதிகா ஆப்தேவின் ‘சாலி மொஹப்பத்’|Radhika Apte’s ‘Saali Mohabbat’ coming straight to OTT

சென்னை,
பிரபல நடிகை ராதிகா ஆப்தே நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘சாலி மொஹப்பத்’. இப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். டிஸ்கா சோப்ரா இந்தப் படத்தை இயக்கி உள்ளார்.
கடந்த ஆண்டே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இந்தப் படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை
இந்நிலையில், இந்த படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் தற்போது ஒரு பெரிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. சாலி மொஹப்பத் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.
இந்த படம் விரைவில் ஜீ5 தளத்தில் வெளியாக உள்ளது. இருப்பினும், எப்போது ஸ்ட்ரீமிங் ஆகும் என்பதை தெரிவிக்கவில்லை. இந்த படம் ஏற்கனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.






