“கைதி” ரீமேக் படத்தை பார்க்க மலேசியா சென்ற கார்த்தி

“கைதி” ரீமேக் படத்தை பார்க்க மலேசியா சென்ற கார்த்தி


மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான ‘கைதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்ற படம் கைதி. இந்த படத்தில் கார்த்தி உடன் நரேன், அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். லோகேஷ் கனகராஜுடைய சினிமாட்டிக் யுனிவர்ஸில் கைதி திரைப்படம் முக்கியமான ஒன்றாக அமைந்தது. இப்படம் வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

‘கைதி’ திரைப்படம் இந்தியில்‘போலா’ என்ற பெயரில் ரீமேக் ஆகி வெளியானது. தற்போது மலாய் மொழியில் ‘கைதி’ படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.மலாய் மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள ‘பந்துவான்’ படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது. ஆரோன் அஸிஸ் நாயகனாக நடிக்க கிரோல் அஸ்ரி இப்படத்தை இயக்கியுள்ளார். தமிழில் தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் மலேசியாவின் ஆஸ்ட்ரோ ஷா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.

இந்நிலையில், ‘கைதி’ படத்தின் மலாய் ரீமேக் ‘பந்துவான்’ படத்தை பார்க்க நடிகர் கார்த்தி மலேசியா சென்றுள்ளார். திரையரங்குகளில் வரும் 6 ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் சிறப்புத் திரையிடலை கதை நாயகன் ஆரோனுடன் பார்த்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Astro Shaw Sdn Bhd (@astroshaw)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *