வைரலாகும் அஜித்தின் போட்டோ ஷூட் வீடியோ

வைரலாகும் அஜித்தின் போட்டோ ஷூட் வீடியோ


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித்குமார். சினிமா தாண்டி கார் பந்தயத்திலும் கலக்கி வரும் நடிகர் அஜித் குமார், சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்தார். மேலும், இந்தாண்டு இறுதியில் மலேசியாவிலும், அடுத்த ஆண்டில் (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது.

இதற்கிடையே, அஜித் குமாரின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் படம் கமர்ஷியல் படமாக அமையும் என ஆதிக் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். புதிய படத்தின் பிரீ புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

இதற்கிடையே, அஜித் குமார் தனது குடும்பத்தினருடன் பாலக்காட்டில் உள்ள பகவதியம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். அப்போது, அஜித் தனது மார்பின் வலதுபக்கத்தில் பச்சைக் குத்திக் கொண்டு இருந்தது இணையத்தில் கவனம் பெற்றது. அந்த டாட்டூ அஜித்தின் குலதெய்வமான பகவதியம்மன் என கூறப்பட்டது.கடந்த 2 தினங்களுக்கு முன்பு திருப்பதி கோவிலில் நடிகர் அஜித் குமார் சாமி தரிசனம் செய்தார். மேலும் ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

இந்த நிலையில், ஆங்கில மாத இதழ் ஒன்றின் அட்டை புகைப்படத்திற்கும், நேர்காணலுக்கும் நடிகர் அஜித் குமார் படப்பிடிப்பில் கலந்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நவம்பர் மாதத்திற்கான இதழில் அஜித் குறித்த பலரும் அறிந்திராத தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *