அனைவரும் எதிர்பார்த்த விஜே சித்துவின் டயங்கரம் படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்.. இதோ

டயங்கரம்
Youtube-ல் இருந்து சமீபகாலமாக பல திறமைகள் வெள்ளித்திரையை நோக்கி காலடி எடுத்து வைக்கிறார்கள். அந்த வரிசையில் அனைவரும் எதிர்பார்த்த Youtuber விஜே சித்துவும் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
இவர் ஏற்கனவே ட்ரிப் மற்றும் டிராகன் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், தானே ஒரு படத்தை இயக்கி ஹீரோவாக தற்போதுதான் அறிமுகமாகிறார். இப்படத்திற்கு டயங்கரம் என தனது ஸ்டைலில் தலைப்பு வைத்துள்ளார்.
ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ஹர்ஷத் கான், நட்டி நட்ராஜ், இளவரசு ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். இவர் ஜோ படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பூஜை
டயங்கரம் படத்தின் அறிவிப்பு வெளிவந்திருந்தாலும், படப்பிடிப்பு எப்போது என்கிற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று டயங்கரம் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.






