“பைசன்” படத்திற்கு துருவ் விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“பைசன்” படத்திற்கு துருவ் விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?


சென்னை,

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் கடந்த 17ந் தேதி வெளியான படம் ‘பைசன்’. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தினை பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.

இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. மணத்தி கணேசனின் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார் நடிகர் துருவ் விக்ரம். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இவருக்கென தனி அடையாளம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், பைசன் படத்திற்காக நடிகர் துருவ் விக்ரம் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, பைசன் படத்திற்காக துருவ் விக்ரம் சுமார் ரூ. 4 முதல் 5 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக என கூறப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *