இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்கள்.. என்னென்ன?

எப்படி ஓவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமை திரையரங்கில் படம் வெளியாகிறதோ, அது போன்று ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் OTT-ல் புதிய படங்கள் வெளியாவது வழக்கம்.
அந்த வகையில், இந்த வாரம் OTT-ல் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பது குறித்து கீழே காணலாம்.
படங்கள்:
OG:
ஆக்ஷன் கதையம்சம் கொண்ட கேங்ஸ்டர் படமான இந்த OG திரைப்படம் இன்று அதாவது 23-வது தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி உள்ளது.
சக்தித் திருமகன்:
விஜய் ஆண்டனி நடித்த ‘சக்தித் திருமகன்’ திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் நாளை அக். 24ந் தேதி வெளியாகிறது.
பரம் சுந்தரி:
ஜான்வி கபூரின் ‘பரம் சுந்தரி’ திரைப்படம் பிரைம் வீடியோவில் நாளை அக். 24 அன்று வெளியாகிறது.
வெப் தொடர்கள்:
குருக்ஷேத்ரா: பகுதி 2: நெட்ஃபிளிக்ஸில் அக்டோபர் 24 முதல் ஒளிபரப்பாகிறது.
மகாபாரத்: ஏக் தர்மயுத்: இந்த தொடர், ஜியோ ஹாட்ஸ்டாரில் அக். 25 அன்று வெளியாகிறது.