6 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் திரைப்படம் செய்துள்ள வசூல்… எத்தனை கோடி தெரியுமா?

பைசன் படம்
பரியேறும் பெருமாள், மாமன்னன், கர்ணன் போன்ற படங்களை இயக்கி மக்களின் கவனத்தை பெற்றவர் மாரி செல்வராஜ்.
தற்போது இவர் துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார், கடந்த வெள்ளிக்கிழமை இப்படம் வெளியாகி இருந்தது. தமிழகத்தை சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் சந்தித்த வாழ்வியல் போராட்டங்களை பற்றி பைசன் படம் உள்ளது.
சாதியை ஏற்றத்தாழ்வுகளை ஒதுக்கிவிட்டு எல்லோரும் ஒன்றாக சமமாக வாழ்வோம் என்கிற கருத்தை இப்படம் பேசுகிறது.
பாக்ஸ் ஆபிஸ்
தமிழில் மட்டுமே வெளியாகியுள்ள இப்படம் 6 நாள் முடிவில் ரூ. 40 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளது.
வருகிற 24ம் தேதி இப்படம் தெலுங்கில் வெளியாகவுள்ளது, அங்கு இப்படம் ஹிட் அடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.