ரஜினி என்னை நம்பி வந்தால், நான்.. இயக்குனர் மாரி செல்வராஜ் பேச்சு

சமீபத்தில் ரிலீஸ் ஆன பைசன் படத்திற்கு கலவையான ரெஸ்பான்ஸ் கிடைத்து இருக்கும் நிலையில், ஐந்து நாட்களில் 35 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.
அந்த படத்தை பார்த்துவிட்டு ரஜினி தன்னை அழைத்து பாராட்டியாக மாரி செல்வராஜ் தெரிவித்து இருக்கிறார்.
“சூப்பர் மாரி சூப்பர் பைசன் பார்த்தேன் படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள்” என ரஜினி கூறினாராம்.
ரஜினி என்னை நம்பி வந்தால்..
இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினி பற்றி பேசி இருக்கும் மாரி செல்வராஜ், “ரஜினி என்னை நம்பி வந்தால்.. அவர் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் படம் எடுப்பேன்” என தெரிவித்து இருக்கிறார்.