ட்ரெண்டிங் பாடலுக்கு நடனம்.. இணையத்தில் வைரலாகும் மமிதா பைஜூவின் வீடியோ!

மமிதா பைஜூ
மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி பின் தொடர்ந்து படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை மமிதா பைஜூ.
இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட இவர், ப்ரேமலு என்ற ஹிட் படத்தை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்துக் கொண்டார்.
தற்போது பிரதீப் ரங்கநாதனுடன் டியூட் (Dude) என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள். சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார்.
வைரல் வீடியோ!
‘டியூட்’ படத்தில் பயன்படுத்தப்பட்ட இளையராஜாவின் கருத்த மச்சான் பாடல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இப்பாடலுக்கு மமிதா பைஜூ ஆடியுள்ள நடனம் 2K கிட்ஸ்களை வெகுவாக கவர்ந்தது. கருத்த மச்சா பாடலுக்கு மமிதா பைஜூ நடனமாடி பயிற்சி செய்யும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. இதோ,