விஜய் டிவியின் புத்தம் புதிய சீரியல்.. கதாநாயகியாக நடிக்கும் அன்ஷிதா

விஜய் டிவி
சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, சின்ன மருமகள் என பல சூப்பர்ஹிட் சீரியல்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்றன.
சமீபத்தில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியும் தொடங்கிவிட்டது.
]
புதிய சீரியல்
இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் புதிதாக சீரியல் ஒன்று வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்லமா சீரியல் கதாநாயகியும், பிக் பாஸ் பிரபலமுமான அன்ஷிதா இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கிறார்.
இவருடன் இணைந்து குணா குமார், நீ நான் காதல் சீரியல் நடிகர் பிரேம் மற்றும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் புகழ் நடிகை தர்ஷனா ஆகியோர் நடிக்கிறார்களாம். இந்த புத்தம் புதிய சீரியல் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.