2 வார முடிவில் காந்தாரா Chapter 1 படம் செய்த தெறிக்கும் வசூல் வேட்டை… எவ்வளவு தெரியுமா?

காந்தாரா Chpater 1
பான் இந்திய திரைப்படமாக கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ள திரைப்படம் காந்தாரா சாப்டர் 1.
ஆயுதபூஜை ஸ்பெஷலாக வெளியான இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, நடிக்க அவருடன் ருக்மணி வசந்த், ஜெயராம், குல்ஷன் தேவையா, பிரமோத் ஷெட்டி, ரமேஷ் பூஜாரி, பிரகாஷ் துமினாட் என பலர் நடித்துள்ளனர்.
முதல் பாகத்தை தாண்டிய வரவேற்பு இந்த படத்திற்கு உள்ளது என்றே கூறலாம்.
பாக்ஸ் ஆபிஸ்
ஏற்கெனவே படம் ரூ. 600 கோடியை தாண்டிய வசூல் வேட்டை நடத்திவரும் நிலையில் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பால் தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
பெரும்பாலான திரைகளில் காந்தாரா திரையிடப்படும் என்பதால் படம் கண்டிப்பாக ரூ. 1000 கோடியை தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2 வார முடிவில் இப்படம் மொத்தமாக ரூ. 717.50 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.