வடசென்னை படம் வெளிவந்து 7 ஆண்டுகள்.. படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா

வடசென்னை
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வடசென்னை. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, கிஷோர் ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
தற்போது வடசென்னை உலகில் புதிதாக அரசன் என்கிற தலைப்பில் படம் உருவாகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு இப்படத்தில் நடிக்கிறார். நேற்று இப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏழு ஆண்டுகள்
இந்த நிலையில், இன்றுடன் வடசென்னை படம் வெளிவந்து எழு ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வரும் நிலையில், இப்படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, வடசென்னை படம் உலகளவில் ரூ. 60 முதல் ரூ. 65 கோடி வரை வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ரூ. 40 கோடி வசூல் செய்துள்ளது.