உண்மையை எதிர்கொள்ள ஏன் இவ்வளவு தயக்கம்?- மாரி செல்வராஜ் ஆதங்கம் | Why so reluctant to face the truth?

சென்னை,
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் “பைசன்”. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவான இந்த படம் இன்று வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் மாரிசெல்வராஜ், “தனி மனிதர்களை புகழ்பாடும் கதைகளை மட்டுமே இன்னும் படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள், அந்த இயக்குனர்களை யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால், தென் மாவட்டங்களில் நடக்கும் உண்மை சம்பவங்களை படமாக எடுக்கும் என் மீது ஏன் இவ்வளவு விமர்சனம்? ஒரு உண்மை கதை போதும் என சொல்வதற்கு இவர்கள் யார்? யார் அந்த உரிமையை கொடுத்தது?”. உண்மையை எதிர்கொள்ள ஏன் இவ்வளவு தயக்கம். ” என்று ஆதங்கமாக பேசியுள்ளார்.