போட்டியாளர்களால் கடும் கோபமான பிக் பாஸ்.. எடுத்த அதிரடி முடிவு

பிக் பாஸ் 9ம் சீசன் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அது மட்டுமின்றி ஹாட்ஸ்டாரிலும் 24 நேரமும் ஒளிபரப்பாவதால் போட்டியாளர்கள் செய்யும் பல விஷயங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
மறுபுறம் போட்டியாளர்கள் வீட்டில் ஒழுக்கமாக இல்லை என சொல்லி பிக் பாஸ் கடும் கோபமாக திட்டி இருக்கிறார்.
தல பதவி பறிப்பு
பிக் பாஸ் வீட்டில் யாரும் discipline ஆக இல்லை, வீட்டின் தல துஷார் கூட பல முறை மைக் மாட்டாமல் இருக்கிறார் என பிக் பாஸ் கூறினார்.
அதனால் இந்த வீட்டுக்கு இனி தல தேவையில்லை என சொல்லி துஷாரின் தலைவர் பதவி பறிக்கப்பட்டது.
நாமினேஷனில் இருந்து தப்ப டாஸ்க்
போட்டியாளர்களுக்கு இன்று நாமினேஷனில் இருந்து தப்ப ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதில் சபரி எலிமினேட் ஆகிறார். அதன் பின் துஷார் மற்றும் கம்ருதீன் ஆகியோர் மட்டும் டாஸ்கில் மோதுகின்றனர்.
VJ பாரு..
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் பற்றி VJ பாரு பேசுவது மூன்றாவது ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது. சில போட்டியாளர்களை விஷம் என சொல்லும் பார்வதி, சபரி டாஸ்கில் எலிமினேட் ஆனது தனக்கு மகிழ்ச்சியாக இருந்ததாக கூறுகிறார்.