கார்த்தி நடித்துள்ள “வா வாத்தியார்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கார்த்தி நடித்துள்ள “வா வாத்தியார்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘மெய்யழகன்’. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி தனது 26வது படமான ‘வா வாத்தியார்’ என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் நலன் குமாரசாமி, “சூது கவ்வும், காதலும் கடந்து போகும்” உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

வா வாத்தியார் படத்தில் நடிகர் கார்த்தி எம்.ஜி.ஆர் ரசிகனாக நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், இப்படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், “வா வாத்தியார்” படத்தின் ரிலீஸ் தேதி படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற டிசம்பர் 5ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *