ஓடிடியில் வெளியாகும் சத்யராஜின் சஸ்பென்ஸ் திரில்லர்… எதில், எப்போது பார்க்கலாம்?

சென்னை,
நடிகர் சத்யராஜ் நடித்திருக்கும் படம் திரிபநாதரி பார்பரிக். இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியானது. மோகன் ஸ்ரீவத்சா இயக்கிய இந்த சஸ்பென்ஸ் திரில்லர் இப்போது ஓடிடியில் வெளியாக தயாராகி இருக்கிறது.
சன் நெக்ஸ்ட் தளம் இதன் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த படம் வருகிற 10-ம் தேதி முதல் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.
திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் தற்போது ஓடிடியில் எவ்வாறு ரசிகர்களை கவர போகிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
வானரா செல்லுலாய்டு பேனரின் கீழ் விஜய்பால் ரெட்டி அடிதலா தயாரித்த இந்தப் படத்தில் வசிஷ்ட என். சிம்ஹா, சத்யம் ராஜேஷ், உதய பானு மற்றும் சாஞ்சி ராய் ஆகியோர் நடித்துள்ளனர்.