‘மதராஸி’ முதல் ‘தி கேம்’ வரை… இந்த வார ஓடிடி ரிலீஸ்

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
படங்கள் | ஓடிடி தளங்கள் |
ஜூனியர் | பிரைம் வீடியோ, ஆஹா தமிழ் |
மதராஸ் | பிரைம் வீடியோ |
லிட்டில் ஹார்ட்ஸ் | ஈடிவி வின் |
மைனே பியார் கியா | பிரைம் வீடியோ, சிம்பிலி சவுத் |
செக்மேட் | ஜீ5 |
காந்தி கண்ணாடி | பிரைம் வீடியோ |
நாளை நமதே | ஆஹா தமிழ் |
தி கேம் | நெட்பிளிக்ஸ் |
“ஜூனியர்”
ராதா கிருஷ்ணா ரெட்டி இயக்கத்தில் ஸ்ரீலீலா நடித்துள்ள படம் ‘ஜூனியர்’. இதில் கதாநாயகனாக கிரீத்தி ரெட்டி நடித்துள்ளார். காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி பிரைம் வீடியோ ஓடிடியில் வெளியாகி உள்ளது.
“மதராஸி”
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ‘மதராஸி’. இத்திரைப்படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த அக்டோபர் 1ந் தேதி பிரைம் வீடியோ ஓடிடியில் வெளியாகி உள்ளது.
“லிட்டில் ஹார்ட்ஸ்”
சாய் மார்த்தந்த் இயக்கிய படம் “லிட்டில் ஹார்ட்ஸ்”. இதில் மவுலி தனுஜ் பிரஷாந்த் மற்றும் சிவானி நாகரம் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் ராஜீவ் கனகலா, எஸ். எஸ். காஞ்சி, மற்றும் ஜாய் கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காதல் கதைக்களத்தில் வெளியான இப்படம் கடந்த 1ந் தேதி ஈடிவி வின் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
“மைனே பியார் கியா”
பைசல் பாசிலுதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மைனே பியார் கியா’. இதில் நடிகை பிரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஹிருது ஹாரூண், அனார்கலி மரிக்கார் மற்றும் அல்தாப் சலீம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் கடந்த நேற்று முன்தினம் பிரைம் வீடியோ மற்றும் சிம்பிலி சவுத் ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளது.
“செக்மேட்”
ரதீஷ் சேகர் இயக்கிய பரபரப்பான சஸ்பென்ஸ் நிறைந்த படம் செக்மேட். இதில் அனூப் மேனன், லால் மற்றும் ரேகா ஹரிந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் கடந்த 2ந் தேதி (நேற்று) வெளியாகி உள்ளது.
“காந்தி கண்ணாடி”
ஷெரீப் இயக்கத்தில் கேபிஒய் பாலா நடிப்பில் வெளியான படம் காந்தி கண்ணாடி. இதில் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நேற்று பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
“நாளை நமதே”
வெண்பா கதிரேசன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் நாளை நமதே. இந்த படத்தில் மதுமிதா, வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில் குமார், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் நேற்று ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
“தி கேம்”
ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகியுள்ள படம் தி கேம். இந்த படத்தில் ஷ்ரத்தாவுடன், சந்தோஷ் பிரதாப், சாந்தினி, விவியா சாந்த், ஹேமா, சுபாஷ் செல்வம், பாலா ஹாசன், சியாமா ஹரிணி மற்றும் தீரஜ் கெர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் நேற்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது.