கண்மூடித்தனமா பின்னாடி போகாதீங்க.. நடிகர் அஜித் பேட்டி

கண்மூடித்தனமா பின்னாடி போகாதீங்க.. நடிகர் அஜித் பேட்டி


அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த குட் பேட் அக்லி படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் – அஜித் கூட்டணி இணைந்துள்ளனர்.

AK 64 படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிப்பை தாண்டி தற்போது கார் ரேஸில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார் அஜித் குமார்.

கண்மூடித்தனமா பின்னாடி போகாதீங்க.. நடிகர் அஜித் பேட்டி | Ajith Kumar Old Interview Viral Now

சமீபத்தில் நடைபெற்ற 24 மணிநேர கார் ரேஸில் அஜித்தின் குழு மூன்றாவது இடத்தை பிடித்தனர்.

அஜித் கடந்த சில ஆண்டுகளாக எந்த ஒரு பேட்டியும் தருவதில்லை. கார் ரேஸில் அவர் பேட்டி அளித்திருந்தாலும் கூட, சினிமா குறித்து எந்த பேட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் பேட்டி

இந்நிலையில், அஜித் அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த பேட்டியில், “கண்மூடித்தனமா யார் பின்னாலேயும் போகாதீங்க. கண்மூடித்தனமா யாரையும் நம்பாதீங்க. நான் இன்னைக்கு சினிமால இருக்கலாம் நாளைக்கு இல்லாமல் கூட போகலாம். உங்களுடைய படிப்பு மற்றும் மனசாட்சி மட்டுமே உங்களை காப்பாத்தும்.

கண்மூடித்தனமா பின்னாடி போகாதீங்க.. நடிகர் அஜித் பேட்டி | Ajith Kumar Old Interview Viral Now

மத்தவனை மதிக்காமல் நீ என்ன வேணா பண்ணு, இதை நான் பொதுவா சொல்றேன் என்னோட ரசிகர்களுக்காக மட்டும் சொல்லவில்லை. உனக்கு பிடித்த விஷயத்துக்காக நீ என்ன வேணா பண்ணு. அடுத்தவன் கால் மிதிச்சி முன்னேறாதீங்க. நீயும் வாழு மத்தவங்களையும் வாழ விடு. இது என்னுடைய ரிக்வஸ்ட்” என பேசியுள்ளார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *