அரசியல் பயணத்தில் விஜய் அப்படி செய்தது வருத்தமளிக்கிறது… பிரபல நடிகை

அரசியல் பயணத்தில் விஜய் அப்படி செய்தது வருத்தமளிக்கிறது… பிரபல நடிகை


தமிழக வெற்றிக் கழகம்

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் நடந்த ஒரு விஷயம் பரபரப்பின் உச்சமாக இன்னும் பேசப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்ததில் இருந்து தமிழக அரசியலில் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளது. எல்லா தலைவர்களின் கவனமும் இந்த புதிய கட்சியின் மீது தான் உள்ளது என்று தான் கூற வேண்டும்.

கடந்த சனிக்கிழமை விஜய் கரூரில் Road Show உரிய அனுமதி வாங்கி நடத்தினார், ஆனால் அங்கு என்ன ஆனதோ திடீரென தள்ளுமுள்ளு நடக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் இறந்துள்ளனர், நிறைய பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அரசியல் பயணத்தில் விஜய் அப்படி செய்தது வருத்தமளிக்கிறது... பிரபல நடிகை | Popular Actress Comment About Vijay Road Show

நடிகை வருத்தம்


கரூரில் நடந்த சம்பவம் குறித்து தான் கடந்த 2 நாட்களாக பேசப்பட்டு வருகிறது.

கரூரில் விஜய் இருக்கும் போதே தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது, ஆனால் அவர் யாரையும் சந்திக்காமல் சென்னை சென்றுவிட்டார் என்பது பலரின் குற்றச்சாட்டாக உள்ளது.

அரசியல் பயணத்தில் விஜய் அப்படி செய்தது வருத்தமளிக்கிறது... பிரபல நடிகை | Popular Actress Comment About Vijay Road Show

இதுகுறித்து நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான சனம் ஷெட்டி பேசும்போது, கரூரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர், பாதித்தோரை தவெக தலைவர் விஜய் சந்திக்காதது வருத்தம் அளிக்கிறது.

தவெக பரப்புரை திட்டத்தை மாற்றி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை வேண்டும் என கூறியுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *