ஓடிடியில் வெளியாகும் ''சுமதி வளவு''…எதில், எப்போது தெரியுமா?

சென்னை,
திகில் திரைப்படமான ”சுமதி வளவு” விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. வருகிற 26-ம் தேதி முதல் ஜீ5 தளத்தில் தமிழ், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.
கடந்த மாதம் 1 -ம் தேதி திரைக்கு வந்த சுமதி வளவு, மந்தமான விமர்சனங்களை பெற்ற போதிலும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் ரூ. 20 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில், அர்ஜுன் அசோகன், மாளவிகா மனோஜ், சித்தார்த் பரதன், கோகுல் சுரேஷ், பாலு வர்கீஸ், சைஜு குருப், ஷிவதா, தேவானந்தா, ஸ்ரீபத் யான், ஜூஹி ஜெயக்குமார், ஜஸ்னியா கே ஜெயதீஷ், கோபிகா அனில் மற்றும் ஷ்ரவன் முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகை பாமா இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து அதன் 2-ம் பாகமும் உருவாக இருக்கிறது. இதற்கு ”சுமதி வளவு 2: தி ஆரிஜின்” என பெயரிடப்பட்டுள்ளது.