KISS திரை விமர்சனம்

KISS திரை விமர்சனம்


நடன இயக்குநர் சதிஷ் இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் கிஸ் (kiss). இப்படத்தில் கவின், ப்ரீத்தி அஸ்ரானி, விடிவி கணேஷ், மிர்ச்சி விஜய், பிரபு, விஜய் டிவி ஷக்தி, தேவயானி, ராவ் ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இன்று வெளிவந்துள்ள கிஸ் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க. 

KISS திரை விமர்சனம் | Kiss Movie Review

கதைக்களம்



கதாநாயகி ப்ரீத்தி அஸ்ரானி மூலம் கதாநாயகன் கவினுக்கு புத்தகம் ஒன்று கிடைக்கிறது. இந்த புத்தகம் அவர் கைக்கு வந்தபின், காதலர்கள் முத்தம் கொடுத்து கொண்டால் அவர்களுடைய எதிர்காலம் கவினுக்கு தெரியவருகிறது.



காதல் என்றாலே கடுப்பாகும் கவின், இந்த சக்தியை வைத்துக்கொண்டு காதலர்களை பிரித்துக்கொண்டே இருக்கிறார். தான் யாரையும் காதலிக்க மாட்டேன் என சொல்லிக்கொண்டு இருக்கும் ஹீரோ கவின், ஒரு கட்டத்தில் ஹீரோயின் ப்ரீத்தியை காதலிக்க துவங்குகிறார்.

KISS திரை விமர்சனம் | Kiss Movie Review

தனது காதலை கவினிடம் உணரவைக்க அவருக்கு முத்தம் கொடுக்கிறார் ப்ரீத்தி. அப்போது ப்ரீத்தி விரைவில் இறந்துபோவது போல் கவினுக்கு தெரியவருகிறது.



கவின் தனது காதலை ப்ரீதியிடம் சொன்னால்தான் அவள் இறந்துபோவாள் என கவினுக்கு தெரியவர இதன்பின் என்ன நடக்கிறது? அந்த புத்தகத்திற்கும் கவினுக்கும் என்ன சம்மந்தம்? ப்ரீத்திக்கு என்ன ஆனது? இருவரும் இணைந்தார்களா இல்லையா? என்கிற பல கேள்விகளுக்கு விடையளிப்பதே படத்தின் மீதி கதை. 

KISS திரை விமர்சனம் | Kiss Movie Review

படத்தை பற்றிய அலசல்



நடனத்தில் பட்டையை கிளப்பி கொண்டிருந்த சதிஷ் இப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அவருக்கு முதல் வாழ்த்துக்கள். கிஸ் படத்திற்காக அவர் எடுத்துக்கொண்ட கதைக்களம் அருமையாக உள்ளது. அதை திரைக்கதையிலும் சிறப்பாக கொண்டு வந்துள்ளார்.



முதல் பாதி சுவாரஸ்யம் இல்லாமல் நகர்ந்தாலும், இரண்டாம் பாதி சுவாரஸ்யமாக இருந்தது. நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் சிறப்பாக இருந்தது. அதற்கு காரணம் மிர்ச்சி விஜய் மற்றும் விடிவி கணேஷ். இருவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். இவர்கள் இருவருடைய பங்களிப்பு படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது.

KISS திரை விமர்சனம் | Kiss Movie Review

ஆனால், படத்தில் இடம்பெறும் காதல் காட்சிகள், ஃபாண்டஸி விஷயங்கள் யாவும் நம்முடன் கனெக்ட் ஆகவில்லை. அதுதான் படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது.



காதல் என்றாலே பிடிக்காத ராஜா தனது நாட்டில் காதலர்களை கொன்றது, அந்த காதலர்களின் புத்தகம் தற்போது கவினிடம் கிடைத்து, அதன்பின் நடக்கும் ஃபாண்டஸி விஷயங்கள் எல்லாம் ஓகே. ஆனால், அந்த எமோஷன்ஸை நமக்கு சரியாகவும், சுவாரஸ்யமாகவும் கடத்தினாரா இயக்குநர் என்றால் அது கேள்விக்குறிதான். அதை மட்டும் அவர் சரியாக செய்திருந்தால், கண்டிப்பாக இந்த கிஸ் சுவாரஸ்யமான படமாக இருந்திருக்கும். அதுதான் மிஸ் ஆகிவிட்டது.

KISS திரை விமர்சனம் | Kiss Movie Review

அதே போல் படத்தின் கிளைமாக்ஸ் சற்று ஏமாற்றத்தை தந்துவிட்டது. நன்றாக இரண்டாம் பாதி அழகான காட்சிகளுடன் நகர்ந்து வந்த நிலையில், கிளைமாக்ஸ் சொதப்பல் ஆனது ஏமாற்றமே.



கதாநாயகன் கவின் தனது நடிப்பில் எந்த ஒரு குறையும் வைக்கவில்லை. அதே போல் கதாநாயகி ப்ரீத்தி அஸ்ரானி அழகிய நடிப்பில் மனதை கவருகிறார். இவர்களை தவிர்த்து விஜய் டிவி சக்தி, தேவயானி, ராவ் ரமேஷ் ஆகியோரின் நடிப்பும் நன்றாக இருந்தது.

KISS திரை விமர்சனம் | Kiss Movie Review

படத்திற்கு மிகப்பெரிய பலம் ஜென் மார்ட்டின் பின்னணி இசை. அவருக்கு தனி பாராட்டு. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் இன்னும் கூட வலுவாக இருந்திருக்கலாம். வசனங்கள் நன்றாக இருந்தன. குறிப்பாக, “வாழ்க்கையில் ஒரு விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டால் அதை அப்படியே விட்டுவிட வேண்டும், தோணும்போதெல்லாம் கமா போட்டு ஆரம்பிக்க கூடாது” போன்ற வசனங்கள் மனதை தொடுகிறது.  

பிளஸ் பாயிண்ட்



மிர்ச்சி விஜய், விடிவி கணேஷ் நகைச்சுவை காட்சிகள்

பின்னணி இசை


நடிகர்கள், நடிகைகளின் பங்களிப்பு


கதைக்களம்


மைனஸ் பாயிண்ட்



சுவாரஸ்யம் இல்லாத முதல் பாதி



கிளைமாக்ஸ் சொதப்பல்



கனெக்ட் ஆகாத எமோஷன்ஸ்



மொத்தத்தில் இந்த ‘கிஸ்’ சுவாரஸ்யமாகவும் இல்லை, எமோஷனலாகவும் இல்லை.. 

KISS திரை விமர்சனம் | Kiss Movie Review


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *