இந்த தெலுங்கு சீரியல் ரீமேக்கில் தான் நடிக்கிறாரா வினுஷா… வெளிவந்த தகவல்

இந்த தெலுங்கு சீரியல் ரீமேக்கில் தான் நடிக்கிறாரா வினுஷா… வெளிவந்த தகவல்

வினுஷா தேவி

விஜய் டிவியில் படு ஹிட்டாக ஒளிபரப்பாகிய தொடர் பாரதி கண்ணம்மா. அருண் மற்றும் ரோஷினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தமிழ் சின்னத்திரையில் அப்போது டாப் தொடராக இருந்தது.

சில வருடங்கள் கண்ணம்மாவாக சீரியலில் நடித்த ரோஷினி திடீரென தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதில் யார் நடிப்பார் என பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்க கண்ணம்மாவாக நடிக்க வந்தவர் தான் வினுஷா தேவி.

இந்த தெலுங்கு சீரியல் ரீமேக்கில் தான் நடிக்கிறாரா வினுஷா... வெளிவந்த தகவல் | Actress Vinusha Devi New Serial Storyline Details

முதல் பாகத்தை தொடர்ந்து பாரதி கண்ணம்மா 2ம் பாகத்திலும் நடித்தார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், ஆனால் சீக்கிரமே வெளியேறிவிட்டார்.

பிக்பாஸ் பிறகு வினுஷா தேவி பனிவிழும் மலர்வனம் என்ற தொடரில் நாயகியாக நடிக்க அந்த சீரியலும் முடிந்துவிட்டது.

இந்த தெலுங்கு சீரியல் ரீமேக்கில் தான் நடிக்கிறாரா வினுஷா... வெளிவந்த தகவல் | Actress Vinusha Devi New Serial Storyline Details

புதிய தொடர்

இப்போது கடந்த சில நாட்களாக வினுஷா நடிக்கப்போகும் புதிய சீரியல் குறித்த தகவல் வந்துகொண்டிருக்கிறது.

அதாவது StarMaa தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னி என்ற தொடரின் தமிழ் ரீமேக்கில் தான் வினுஷா நடிக்க உள்ளாராம். குழந்தை நட்சத்திரமாக தனிஷ்கா என்பவர் நடிக்கிறார், விரைவில் தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாம்.

இந்த தெலுங்கு சீரியல் ரீமேக்கில் தான் நடிக்கிறாரா வினுஷா... வெளிவந்த தகவல் | Actress Vinusha Devi New Serial Storyline Details

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *