“மதராஸி” படத்திலிருந்து “சலம்பல” வீடியோ பாடல் வெளியீடு

“மதராஸி” படத்திலிருந்து  “சலம்பல” வீடியோ பாடல் வெளியீடு


சென்னை,

தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மதராஸி. இதனை பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இதில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் ரிலீஸான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மதராஸி படத்திலிருந்து “சலம்பல” என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை சாய் அபயங்கர் பாடியுள்ளார். பாடல் வரிகளை சூப்பர் சுப்பு எழுதியுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *