ஓடிடியில் வெளியாகும் “ஹவுஸ் மேட்ஸ்”.. எதில், எப்போது பார்க்கலாம்?

சென்னை,
இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் தர்ஷன் நடித்த ‘ஹவுஸ் மேட்ஸ்’ படம் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் அர்ஷா பைஜு, காளி வெங்கட், வினோதினி மற்றும் தீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை விஜய பிரகாஷ் தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தை ப்ளே ஸ்மித் நிறுவனமும் சௌத் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டார். இப்படம் ரூ. 3 கோடி வசூல் செய்தது.
இந்த நிலையில், ‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் 19ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது