ஓடிடியில் வெளியான ஜென்ம நட்சத்திரம் | Jenma Natchathiram ott release date

ஓடிடியில் வெளியான ஜென்ம நட்சத்திரம் | Jenma Natchathiram ott release date


2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த குழுவின் அடுத்த படமான ’ஜென்ம நட்சத்திரம்’ என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படம் செப் 11-ம் தேதி (நேற்று முன் தினம்) டெண்ட்கோட்டா மற்றும் அமேசான் பிரைம் வீடியோ தளங்களில் வெளியாகியுள்ளது.

ஹாரர் த்ரில்லர் கதையாக ‘ஜென்ம நட்சத்திரம்’ உருவாகியுள்ளது. இதில் தமன் அக்‌ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்‌ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஸ்காந்த், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜென்ம நட்சத்திரம் திரைப்படத்தின் கதைக்களம் தமன், மனைவி மால்வி மல்ஹோத்ராவுடன் வாழ்ந்து வருகிறார். கர்ப்பமாக இருக்கும் மால்விக்கு அடிக்கடி கெட்ட கனவுகளும், சில உருவங்களும் கனவில் வந்து போகிறது. மறுபக்கம் அரசியல்வாதியின் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார் காளி வெங்கட். இவரது மகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு ரூ. 40 லட்சம் பணம் தேவைப்படுகிறது.

அப்போது தேர்தலுக்காக வைத்திருக்கும் கோடிக்கணக்கான பணத்தை எடுத்து யாருக்கும் தெரியாமல் காளி வெங்கட் தொழிற்சாலையில் பதுக்கி வைக்கிறார். காளி வெங்கடை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகிறது.பணம் இருக்கும் தகவலை தமன் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்து விட்டு இறந்து போகிறார்.பணத்தை எடுப்பதற்காக தமன், மனைவி மால்வி மற்றும் நண்பர்கள் அந்த இடத்திற்கு செல்கிறார்கள். பணத்தை தேடும் நண்பர்கள் ஆபத்தில் சிக்குகிறார்கள்.

நண்பர்களை தமன் காப்பாற்றினாரா?, அவரது மனைவியின் கனவுக்கும், அந்த இடத்திற்கும் என்ன தொடர்பு? காளி வெங்கட்டின் மகளின் நிலை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. பரபரப்பான இந்த திரைப்படத்தை இந்த வாரம் உங்கள் கண்களுக்கு விருந்தாக கண்டு களியுங்கள்.



admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *