மிராய் திரை விமர்சனம்

மிராய் திரை விமர்சனம்


மிராய்

தெலுங்கு சினிமா தற்போது மித்தாலஜி ஜானரை கையில் எடுத்து செம ஹிட் கொடுத்து வரும் நிலையில், ஏற்கனவே ஹனுமான் ஹிட் உடன் தேஜா நடிப்பில் கார்த்திக் இயக்கத்தில் மீண்டும் ஒரு மித்தாலஜி படமாக வெளிவந்துள்ள மிராய் எப்படியுள்ளது? பார்ப்போம். 

மிராய் திரை விமர்சனம் | Mirai Movie Review

கதைக்களம்



கி.மு 232-ல் கலிங்க போரில் அசோகர் தன்னால் நடந்த பேரழிவால் மனம் வருந்தி தன்னிடம் உள்ள சக்தியை 9 புத்தகங்களில் அடக்கி அதை 9 போர் வீரர்களிடம் ஒப்படைக்கிறார்.

பல யுகம் கடந்து தற்போது அந்த புத்தகங்கள் ஒவ்வொன்றையும் அடைந்து உலகையே அழிக்க திட்டமிடுகிறார் மனோஜ் மஞ்சு.

இதை அறிந்துக்கொண்ட ஸ்ரேயா இதை அழிக்க ஒரு வழி தன் மகன் தான் என தெரிந்துக்கொள்கிறார்.


அதோடு அம்மா பாசம் இல்லாமல் தான் யார் என்றே தெரியாமல் மகனை அநாதையாக விட வேண்டும், அந்த 9வது புத்தகத்தை வில்லன் அடைய வரும் போது தன் மகன் ராமரின் ஆயுதம் மிராஜை அடைந்து வில்லனை அழிக்க வேண்டும் என்பதே விதி.

இதற்காக ஸ்ரேயா தன் மகனை அநாதையாக வாரணாசி-ல் விட்டு செல்கிறார்.

அதை தொடர்ந்து 24 வருடம் கழித்து ஹீரோயின் ரித்திகா, ஸ்ரேயா மகன் தேஜாவை தேடி வந்து உண்மையை புரிய வைக்க, பிறகு என்ன தேஜா மிராஜை அடைந்தாரா, அந்த 9வது புத்தகத்தை காப்பாற்றினாரா என்ற பேண்டசி பயணமே இந்த மிராஜ்.

மிராய் திரை விமர்சனம் | Mirai Movie Review


படத்தை பற்றிய அலசல்



தேஜா வித்தையை கற்றுக்கொண்டார் என்றே சொல்ல வேண்டும், நாம் 10 பேரை அடித்தால் நம்ப மாட்டார்கள் அதனால் பேண்டஸி தான் ஒரு வழி என்று ஹனுமான் தற்போது மிராஜ் என தன் கதை தேர்விலேயே கலக்குகிறார், அவரும் தன் கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார், கண்டிப்பாக தேஜா திரைப்பயணத்தில் இதுவும் ஒரு மைல் கல் படம் தான்.


ஹீரோயின் என்றால் ஏதோ ஹீரோவை காதலிக்க தான் என்றில்லாமல், தேஜாவின் சக்தியை அவருக்கு உணர்த்த அவரை தேடி அலைவது, அவருக்கு புரிய வைப்பது என ரித்திகாவிற்கும் நல்ல ரோல் தான்.

மிராய் திரை விமர்சனம் | Mirai Movie Review


வில்லன் கதாபாத்திரத்தில் மனோஜ் மஞ்சு, 9 புத்தகங்களில் உள்ள சக்தியை அடைய வேண்டும், அதோடு உலகை ஆள வேண்டும் என்ற குறிக்கோள், அவர் உருவம் மிக பலசாலியாக இருந்தாலும், ஏதோ ஒரு வில்லத்தனம் அவரிடம் மிஸ்ஸிங், நமக்கு அங்கும் பெரிய அச்சம் வரவில்லை, அதோடு அவர் எல்லோரையும் மிக எளிதாக அழிப்பது ஒரு தடங்கல் கூட இல்லை என்பது கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது.


அதோடு தானோஸ் 5 கற்களை பெற்று, உலகத்தின் மக்களை 50% ஆக சொடக்கு போட்டு அழிக்க வேண்டும், இதை சூப்பர் ஹீரோஸ் காப்பாற்ற வேண்டும் அட, இது அதுல்லா என்ற கமெண்ட்ஸ் வருவதை தடுக்க முடியவில்லை. 

படத்தின் முதல் பாதி மிராய்-யை தேஜா எப்படி அடைவார் என்ற தேடல் தொடங்க, இடைவேளையில் அந்த கருடனுடன் நடிக்கும் சண்டை பிரமாண்டத்தின் உச்சம், கண்டிப்பாக சிஜி டீம்க்கு பூங்கொத்து கொடுக்கலாம்.

மிராய் திரை விமர்சனம் | Mirai Movie Review


இரண்டாம் பாதி மிராய்-யை வைத்து எப்படி தேடி வரும் வில்லனை அழித்து புத்தகத்தை தேஜா எப்படி காப்பாற்றுகிறார் என்பதே, அதற்கான பயணம் ஒரு கட்டத்திற்கு மேல் கொஞ்சம் சலிப்பு தட்டினாலும், கிளைமேக்ஸில் மித்தாலஜி பேக்டரை கொண்டு வந்த விதம் சிறப்பு.


வில்லன் கதாபாத்திரம் நிகல் காலத்தை விட வர் சிறு வயதில் காட்டப்படும் ப்ளாஸ்பேக் மிரட்டுகிறது, ஆனால், வில்லன் ஏன் இப்படி ஆனார் சிறு வயதில் அவருக்கே என்ன ஆனது என்ற பேக் ஸ்டோரி கொஞ்சம் கூட நியாமில்லாத ஒரு கதையாக உள்ளது.

டெக்னிக்கலாக படம் மிக வலுவாக உள்ளது. இயக்குனரே ஒளிப்பதிவாளர் என்பதால் பல மாநிலங்கள் பயனப்படும் கதையில் மிக அழகாக காட்சிபடுத்தியுள்ளார்.


க்ளாப்ஸ்



படத்தின் கதைக்களம்

டெக்னிக்கல் ஒர்க்

கிளைமேக்ஸ்

பல்ப்ஸ்



அடுத்தடுத்து எளிமையாக கணிக்க கூடிய திரைக்கதை.

இசை இரைச்சல் அதிகம்


மொத்தத்தில் மிராய் அடுத்தடுத்து இது தான் என கணிக்க முடிந்தாலும் அதில் மித்தாலஜி பேக்டர் கலந்து சுவாரஸ்ய பயனமாக்கியுள்ளனர்


3/5  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *