காந்தி கண்ணாடி பட வெற்றி, திருமணம் குறித்து பேசியுள்ள KPY பாலா…

காந்தி கண்ணாடி பட வெற்றி, திருமணம் குறித்து பேசியுள்ள KPY பாலா…


காந்தி கண்ணாடி

ஷெரீப் இயக்கத்தில் பாலா நடிப்பில் உருவான காந்தி கண்ணாடி திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியானது.

Event Managerஆக இருக்கும் பாலா ஒரு 60வது வருட கல்யாண நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்த நிகழ்ச்சியில் நடக்கும் எமோஷ்னல் டிராமா தான் காந்தி கண்ணாடி என கூறப்படுகிறது.

ரூ. 1.3 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ள இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

காந்தி கண்ணாடி பட வெற்றி, திருமணம் குறித்து பேசியுள்ள KPY பாலா... | Kpy Bala Reveals Truth About Marriage

திருமணம்


ஈரோடு மாவட்டம் திண்டலில் உள்ள திரையரங்கில் ஆதரவற்ற முதியவர்களுக்காகச் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.


அங்கு சென்று பாலா ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்தார். அப்போது பேசிய பாலா, நான் சம்பாதிப்பது மக்களுக்காகத்தான். கடைசி வரை இப்படி செய்ய வேண்டும் என நினைக்கிறேன், கல்யாணம் குறித்து தற்போது எனக்கு எந்த ஐடியாவும் இல்லை.

கடந்த 5 வருடமாக என்னையும் மதித்து மக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்து வருகின்றனர்.

மனுக்கள் அளிக்கும் மக்களுக்காக ஓடிக் கொண்டிருக்கிறேன் என்பதால் தற்போது திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *