ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது, சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகும் தொடர்.
இந்த சீரியலில் எந்த ஒரு விசேஷம் நடந்தாலும் அது பரபரப்பின் உச்சமாகவே இருக்கும். இப்படி நடக்குமா, அப்படி நடக்குமா, இந்த மாற்றம் நடக்குமா என ரசிகர்களை புலம்ப வைத்த வண்ணம் இருப்பர்.
இப்போது தர்ஷன் திருமண பரபரப்பு தான் இருக்கிறது, தர்ஷனுக்கு பார்கவி அல்லது அன்புக்கரசி இதில் யாருடன் திருமணம் நடக்கும் என்ற பரபரப்பு கடந்த சில வாரங்களாகவே உள்ளது.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், ஜனனி குணசேகரனிடம், உங்களால் உண்மையை மீறி கெட்டதை ஜெயிக்க வைக்க முடியுமா என கேள்வி எழுப்புகிறார்.
பின் குணசேகரன் ஏற்பாடு செய்தவர் ஜீவானந்தம் மற்றும் பார்கவி ஆபத்தில் உள்ளதை கூற ஜனனி ஷாக் ஆகிறார்.