‘லெவன்’ பட இயக்குனரின் அடுத்த படம் என்ன?

‘லெவன்’ பட இயக்குனரின் அடுத்த படம் என்ன?


சென்னை,

அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம் ‘லெவன்’. இந்தபடத்தில் நடிகர் நவீன் சந்திரா கதாநாயகனாக நடித்திருந்தார். ரியா ஹரி நாயகியாக நடித்திருந்தார் . மேலும் ஷசாங்க், ரவி வர்மா, கீர்த்தி தாம ராஜு, அபிராமி, ‘ஆடுகளம்’ நரேன், திலீபன், ரித்விகா, அர்ஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் திரையரங்குகளில் வரவேற்பு பெற்றது தொடர்ந்து ஓடிடியிலும் மாபெரும் வெற்றி பெற்றது.

இதற்கிடையில், இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ், அடுத்த எந்த மாதிரியான படத்தை இயக்கவுள்ளார். யாரை இயக்கவுள்ளார் என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் அஜ்லிஸ் அடுத்த இயக்கவுள்ள படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *