எம்ஜிஆர் கை வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா? டாப் இயக்குநர்!

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில், தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒரு இயக்குநரின் புகைப்படம் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அட இவரா?
அவர் வேறுயாருமில்லை, தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு தான். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் கோட்.
இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் இவர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கப்போவதாக கூறப்பட்டது.
ஆனால், தற்போது அப்படம் நடக்கவில்லை என்கின்றனர். தற்போது, வெங்கட் பிரபு சிறு வயதில் எம்ஜிஆர் உடன் இருக்கும் போட்டோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.