Prabhu Deva and Vadivelu having fun; Video goes viral | ஜாலியாக வைப் பண்ணும் பிரபுதேவா

Prabhu Deva and Vadivelu having fun; Video goes viral | ஜாலியாக வைப் பண்ணும் பிரபுதேவா


தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத காமெடி கூட்டணிகளில் ஒன்று பிரபுதேவா – வடிவேலு கூட்டணி. நடிகர் பிரபு தேவா,வடிவேலு இணைந்து காதலன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, காதலா காதலா, மனதை திருடி விட்டாய், எங்கள் அண்ணா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர். இதில்‘மனதை திருடி விட்டாய்’ திரைப்படம் 2001ம் ஆண்டு வெளி வந்தது. இதில் நடிகர் பிரபு தேவா,வடிவேலு,விவேக்,கவுசல்யா போன்ற பலர் நடித்து இருந்தனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இப்படத்தில் வரும் அனைத்து நகைச்சுவை காட்சிகளும் ஹிட்டானது. விவேக்,வடிவேலு, பிரபு தேவாவின் காம்போ மக்கள் மனதை அதிகம் கவர்ந்தது. அதில் வரும் நகைச்சுவை காட்சிகள் மிகவும் பிரபலம். இன்று வரை நாம் அனைவராலும் பார்த்து ரசிக்கப் பட்ட காட்சிகள் இன்றும் அவை இன்ஸ்டாகிராமில் மீம் டெம்ப்லேட்டுகளாக உலாவிக் கொண்டுதான் இருக்கிறது. 2004ம் ஆண்டு வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தில் இறுதியாக வடிவேலு – பிரபு தேவா இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிரபு தேவா இந்தியளவில் அறியப்படும் நடிகர், இயக்குநராக இருந்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ‘பகீரா’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.தொடர்ந்து, நடிகர் விஜய்யுடன் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் வடிவேலு மாமன்னன் வெற்றிக்குப் பின் கேங்கர்ஸ் படத்திலும் கவனம் ஈர்த்திருத்திருந்தார். பஹத் பாசிலுடன் மாரீசன் படத்தில் நடித்தும் வரவேற்பைப் பெற்றார்.

இந்நிலையில், 23 ஆண்டு கழித்து பிரபு தேவாவும், வடிவேலும் சேர்ந்து நடிக்கின்றனர். இப்படத்தை சாம் ரொட்ரிகஸ் இயக்குகிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் துபாயில் நடைபெற்றது.

இதனிடையே பிரபுதேவா ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். காரில் வடிவேலு அமர்ந்திருக்கும் போது, பிரபுதேவாவை பார்த்து “நண்பா நண்பா.. ஓ மை நண்பா.. லவ் யூ லவ் யூ நண்பா” என வடிவேலு பாடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, பிரபுதேவா ‘ப்ரெண்ட்ஷிப்’ என கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *