பிரபாஸின் “தி ராஜா சாப்” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபாஸின் “தி ராஜா சாப்” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு


தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவருபவர் பிரபாஸ். பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். கே.ஜி.எப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்தார். சலார் படம் கடந்தாண்டு வெளியாகி ரூ.700 கோடிக்கும் மேல் வசூலித்தது. இவரது நடிப்பில் சமீபத்தில் ‘கல்கி 2898 ஏடி’ படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது. அதனை அடுத்து தற்போது, மாருதி இயக்கத்தில் ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகும் ‘தி ராஜா சாப்’ படத்தில் நடித்து வருகிறார்.

பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் ஜிஎஸ்கே மீடியா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தினை தயாரிக்கிறது. இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தமன் இசையமைத்து வருகிறார்.

காமெடி கலந்த ஹாரர் கதைக்களத்தில் உருவாகிவரும் இப்படம் சில காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இப்படம் அடுத்தாண்டு சங்கிராந்தியை முன்னிட்டு ஜனவரி 9 ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்

இப்படம் ரிலீசாகும் அதே நாளில் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படமும் வெளியாகிறது. இதனால் இரண்டு பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களும் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்புடன் இருக்கின்றனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *