'தண்டர்போல்ட்ஸ்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் ‘தண்டர்போல்ட்ஸ்’. இது எம்.சி.யுவின் 36-வது படமாகும். இதை பிரபல இயக்குனர் ஜேக் ஷ்ரேயர் இயக்க எரிக் பியர்சன் கதை எழுதி உள்ளார். இவர் பிளாக் விடோ, தோர்:ரக்னராக் உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதி பிரபலமானவர்.
‘தண்டர்போல்ட்ஸ்’ படத்தில், லூயிஸ் புல்மேன், ஜெரால்டின் விஸ்வநாதன், ஹாரிசன் போர்டு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ‘பிளாக் விடோ’ படத்தில் நடித்திருந்த புளோரன்ஸ் பக் மற்றும் டேவிட் கார்பரும் நடிக்கின்றனர்.
கடந்த மே மாதம் வெளியான இப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஆகஸ்ட் 27ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.