விஜய் ஆண்டனியுடன் மோதும் கவின்…

விஜய் ஆண்டனியுடன் மோதும் கவின்…


சென்னை,

பிரபல நடன இயக்குனர் சதீஷ் இயக்கியுள்ள ‘கிஸ்’ படத்தில் கவினுக்கு ஜோடியாக ‘அயோத்தி’ படத்தின் மூலம் பிரபலமடைந்த பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலானநிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 19-ந் தேதி வெளியாக உள்ளது.

மறுபுறம், விஜய் ஆண்டனி நடித்திருக்கும் ”சக்தித் திருமகன்” படமும் அதே தேதியில்தான் வெளியாக இருக்கிறது. முன்னதாக இப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்த நிலையில் பின்னர் செப்டம்பர் 19ம் தேதி தள்ளிப்போனது.

இந்த படத்தை அவரே தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு தெலுங்கில் ‘பத்ரகாளி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் திருப்தி கதாநாயகியாக நடித்துள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *