ஓடிடியில் வெளியானது பவன் கல்யாணின் “ஹரி ஹர வீர மல்லு”

பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஆவார். ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், பவன் கல்யாண் நடிப்பில் கடந்த மாதம் “ஹரி ஹர வீர மல்லு” படம் வெளியானது. இதில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.
மேலும், ரகு பாபு, சச்சின் கெடேகர், வெண்ணிலா கிஷோர், பாபி தியோல் மற்றும் மறைந்த கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ஆகியோர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தநிலையில்,”ஹரி ஹர வீர மல்லு” படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. ஆனால், திரையரங்குகளில் வெளியிட்டதை விட ஓடிடி தளத்தில் கிட்டத்தட்ட 15 நிமிட காட்சிகளை குறைத்துள்ளனர். குறிப்பாக குதிரை சவாரி மற்றும் அம்பு குறிவைக்கும் விஎப்எக்ஸ் (VFX) காட்சி ஆகியவை நீக்கப்பட்டுள்ளன.