முதலில் ஷாருக்கான்.. பிறகு சிவகார்த்திகேயன்..- ஏ.ஆர்.முருகதாஸ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்! | First Shah Rukh Khan.. then Sivakarthikeyan..

முதலில் ஷாருக்கான்.. பிறகு சிவகார்த்திகேயன்..- ஏ.ஆர்.முருகதாஸ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்! | First Shah Rukh Khan.. then Sivakarthikeyan..


‘தீனா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் ரமணா, கஜினி, துப்பாக்கி, ஏழாம் அறிவு, கத்தி, சர்கார் என வெற்றிப்படத்தை கொடுத்து இருக்கிறார். இவரது இயக்கத்தில் சமீபத்தில் ‘சிக்கந்தர்’ படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

அதனை தொடர்ந்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து ‘மதராஸி’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மதராஸி படம் தொடர்பான சுவாரஸ்யமான தகவலை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதாவது, “7 வருடங்களுக்கு முன்பு மதராஸி படத்தில் உள்ள கதாபாத்திரத்தின் ஒரு குணாதிசயத்தை மட்டும் ஷாருக்கானுக்கு சொன்னேன். அது அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது. அவருடன் முறையான பேச்சுவார்த்தை இல்லாததால் தொடரவில்லை. அதற்குப் பிறகுதான் அந்த கதாபாத்திரத்தை இன்னும் மெருகேற்றி சிவகார்த்திகேயனை தேர்வு செய்தேன்” என்று கூறியுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *