74 வயதில் ஜிம் ஒர்கவுட்டில் மிரட்டும் ரஜினிகாந்த்.. வீடியோ இதோ

ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் நேற்று கூலி திரைப்படம் வெளிவந்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட, உலகளவில் ரூ. 155 கோடி முதல் ரூ. 160 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளது.
74 வயதாகியுள்ள ரஜினிகாந்த், தனது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அனைத்து விஷயங்களை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் கூலி இசை வெளியிட்டு விழாவில் கூட உடல்நலன் குறித்து பேசியிருந்தார்.
ஜிம் ஒர்கவுட்
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஜிம் ஒர்கவுட் செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறார். அவர் ஜிம் ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..